தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா; 3 பேர் சாவு
1 min read
Corona for 196 people in Tamil Nadu today; 3 deaths
6.3.2022
தமிழகத்தில் இன்று 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 3 பேர் இறந்துள்ளனா்.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், இன்று மட்டும் 196 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 013 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 554 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆகும். கொரோனா தொற்று பாதிப்பைக் கண்டறிய இன்று 50,298 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் 62 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.