நாட்டாமை பதவிக்காக தம்பியை கொலை செய்த அண்ணன்
1 min read
The brother who killed his brother for the post of Nattamai
6.3.2022
நாட்டாமை பதவிக்காக தம்பியை கொலை செய்த அண்ணன் மற்றும் அவரது மகளை போலீசார் கைது செய்துள்ளனர்.
நாட்டாமை
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் சிவனாகரம பகுதியை சேர்ந்த விவசாயி செந்தில்குமார்(வயது50). இவர் அந்த ஊரின் நாட்டாமையாக இருந்து வருகிறார். இவரது அண்ணன் பாண்டியன் (வயது55).
செந்தில்குமாருக்கும் அவரது அண்ணன் பாண்டியனுக்கும் நாட்டாமை பதவி தொடர்பாக பிரச்சினை இருந்து உள்ளது. இதே போன்று கோவில் கட்டுவது தொடர்பாகவும் ஒரு பிரச்சினை இருந்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இரவு நடுத்தெருவுக்கு வந்த செந்தில்குமாிடம் பாண்டியனும் அவரது மகன் சந்தோஷ்குமார்(வயது26) வாக்கு வாதத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
கொலை
இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியதில்ஆத்திரம் அடைந்த பண்டியன் மற்றும் சந்தோஷ்குமார் தன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில் குமாரின் கழுத்து மற்றும் விலா போன்ற இடங்களில் குத்தி உள்ளனர்.
இதில் பலத்த காயம் அடைந்த செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதனை அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பாலையூர் போலீசார் உயிரிழந்த செந்தில்குமார் உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார், பாண்டின் மகன் சந்தோஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.