கண்ணைக் கட்டிக்கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காய் உடைத்து மாணவி சாதனை
1 min read
Student record for breaking 106 coconuts in 2 minutes with his eyes closed
7.3.2022
அரசு பள்ளி மாணவி தன் கண்களை கட்டிக்கொண்டு 2 நிமிடங்களில் 106 தேங்காய் உடைத்து சாதனை புரிந்தார்.
மாணவி
ஆரணி அடுத்த முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள நாராயண சாமி செட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு பயிலும் மாணவி சுருதி. இவரது தங்கை காஞ்சனா இரு கைகளை விரித்தபடி தரையில் படுத்துக் கொள்ள அவரை சுற்றி 106 தேங்காய்கள் பரப்பி வைக்கப்பட்டது. பின்னர் மாணவி சுருதி தன் கண்களைக் கருப்பு துணியால் கட்டிக்கொண்டு 2 நிமிடத்தில் 106 தேங்காய்களை உடைத்து உலக சாதனை படைத்தார்