July 1, 2025

Seithi Saral

Tamil News Channel

உத்தரபிரதேசம் உள்பட 5 மாநில தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது

1 min read

Five states, including Uttar Pradesh, will go to the polls tomorro

9.3.2022
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டபேரவைகளுக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

5 மாநில தேர்தல்

உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்றன.
403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7-ந் தேதி வரை 7 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றது. ஒட்டுமொத்தமாக உ.பி. சட்டசபை தேர்தலில் மொத்தம் 61.04 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது.

117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. பஞ்சாப் தேர்தலில் மொத்தம் 71.95 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. உத்தரகாண்ட் தேர்தலில் 65.37 சதவீதம் வாக்குகள் பதிவாகின.

கோவா மணிப்பூர் தேர்தல் 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கும் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடந்தது. கோவாவில் 79.61 சதவீத வாக்குகள் பதிவாகின.
60 தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு பிப்ரவரி 8 மற்றும் மார்ச் 5-ந் தேதி என 2 கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. மணிப்பூர் தேர்தலில் சுமார் 74 சதவீத வாக்குகள் பதிவாகின.
இத்தேர்தல்களில் பதிவான அனைத்து வாக்குகளும் இன்று (வியாழக்கிழமை) எண்ணப்படுகின்றன.

களத்தில் கட்சிகள்

உத்தரப்பிரதேசத்தில் ஆளும் பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் ஆகியவை பிரதான கட்சிகள். பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, அகாலிதளம், பாஜக கூட்டணி களத்தில் உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. மணிப்பூரில் பாஜக, காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணி, நாகா மக்கள் முன்னணி, மக்கள் தேசிய கட்சி, களத்தில் நிற்கின்றன. கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஆகியவை களம் காண்கின்றன.

பெரும்பான்மை

403 தொகுதிகளைக் கொண்ட உ.பி. சட்டசபை தேர்தலில் பெரும்பான்மைக்கு 202 இடங்கள் தேவை. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை பெற 59 இடங்கள் பெற வேண்டும். 70 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் பெரும்பான்மைக்கு 21 இடங்கள் தேவை. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூரில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்கு 31 தொகுதிகளில் வெல்ல வேண்டும்.

w

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.