உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்டில் மீண்டும் பாஜக ஆட்சி; பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றியது
1 min read
BJP rule again in Uttar Pradesh, Manipur, Goa and Uttarakhand; Punjab was captured by the Aam Aadmi Party
10/3/2022
உத்தரபிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கிறது. பஞ்சாபை ஆம் ஆத்மி கைப்பற்றியது.
தேர்தல்
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூா், கோவா ஆகிய 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டது. இதில் பஞ்சாப் மாநில்தில் ஆம்ஆப்தி கட்சியுடம் மற்ற 4 மாநிலங்களில் பாரதீய ஜனதாவும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கிறது.
5 மாநில தேர்தல்
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 ந்தேதி வரை சட்டசபை தேர்தல்கள் 7 கட்டங்களாக நடைபெற்றன
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தர சட்டசபைக்கு ஏழு கட்டங்களாகவும்,60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூரின் சட்டசபைக்கு 2 கட்டங்களாகவும் தேர்தல் நடைபெற்றது.
117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கும், உத்தரகாண்டின் 70 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும், கோவாவின் 40 உறுப்பினர்களைக் கொண்ட சட்டசபைக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை
வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மையங் களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கைக்காக 50 ஆயிரம் அதிகாரிகள் நியமிக்கப் பட்டுள்ளனர். சுமார் 1,200 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
உ.பி.யில் 750-க்கும் அதிகமான வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 5 மாநிலங் களிலும் 650-க்கும் மேற்பட்ட வாக்கு எண்ணிக்கை மைய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர்.
வெற்றி
வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்திலேயே வெற்றி வாய்ப்புகள் தெரிய ஆரம்பித்துவிட்டன. உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக முன்னிலை வகித்து வந்தது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆப்தி கட்சி முன்னிலை வகித்தது.
உத்தரபிரதேசம்
உத்தரபிரதேசத்தில் 403 தொகுதிகளில் 276 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் நிலையில் உள்ளது. சமாஜ்வாத் கட்சி 132 தொகுதிகளில் முன்னணி பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றி பெறும் நிலையில் இருக்கின்றன. இதன் மூலம் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது.
உத்தரகாண்ட்
உத்தரகாண்ட் மாநில சட்டசபையில் 70 தொகுதிகள் உள்ளன. அதில், பாஜக 48 தொகுதிகளில் வெற்றிபெறும் நிலை ஏற்பட்டுஉள்ளது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும் மற்றவை 4 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் இருக்கின்றன.
பஞ்சாப்
117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டசபை ஆம் ஆத்மி கைப்பற்றியுள்ளது. அம்மாநிலத்தில் 91 தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றிபெறும் நிலையில் இருக்கிறது. இதன் மூலம் தனிப்பெரும்பான்மையுடன் பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சியமைய உள்ளது.
அம்மாநிலத்தில் காங்கிரஸ் 19 தொகுதிகளிலும், சிரோமணி அகாலி தளம் 3 தொகுதியிலும், பாஜக 2 தொகுதியிலும் வெற்றி முகத்தில் உள்ளன. இந்த மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தது.
கோவா
40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபை தேர்தலில் பாஜக முன்னிலை வகிக்கிறது. அம்மாநிலத்தில் பாஜக 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் பிற கட்சிகள் 4 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் உள்ளன.
இந்த மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க ஒரு தொகுதி குறைவாக உள்ளது. ஆனாலும் தனிபெரும் கட்சியாக பாரதீய ஜனதா விளங்குவதால் அக்கட்சி உரிமை கோரியுள்ளது. அந்த மாநிலத்திலும் மீண்டும் பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது.
மணிப்பூர்
60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தொடக்கம் முதலே பாஜக முன்னிலை வகித்தது. அம்மாநிலத்தில் பாஜக 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 6 தொகுதிகளிலும் தேசிய மக்கள் கட்சி 9 தொகுதிகளிலும் வெற்றிபெறும் நிலையில் இருக்கின்றன.. இந்த தொகுதியிலும் பாரதீய ஜனதா மீண்டும் ஆட்சியை தக்க வைத்து கொள்கிறது.