ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்
1 min read
Conditional bail for Jayakumar
11.3.2022
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கியது.
ஜெயக்குமார்
நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது சென்னை ஐகோர்ட்டு. திருச்சியில் 2 வாரம் தங்கி இருந்து கண்டோன்மென்ட் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என ஐகோர்ட்டு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. மேலும் திருச்சியில் இருந்து வந்த பின் வாரந்தோறும் திங்கட்கிழமை விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
3 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்ததால் விரைவில் சிறையில் இருந்து ஜெயக்குமார் வெளியே வருகிறார். ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கியது, சாலை மறியல் வழக்குகளில் ஜெயக்குமாருக்கு ஜாமின் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.