தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா; இன்று இறப்பு இல்லை
1 min read
Corona for 112 people in Tamil Nadu today; There is no death today
11.3.2022
தமிழகத்தில் இன்று 112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. 327 பேர் குணமடைந்து உள்ளனர். நேற்று 129 பேருக்கு கோவிட் பாதிப்பு இருந்த நிலையில் இன்று பாதிப்பு 112 ஆக குறைந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழகத்தில் 42,241 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 112 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,51,710 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 56 பேர் ஆண்கள், 56 பேர் பெண்கள். இன்று 327 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,12,226 ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழப்பு இல்ை
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று யாரும் உயிரிழக்கவில்லை.இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,023 ஆக உள்ளது.
சென்னை
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சென்னையில் கோவிட் தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று 44 ஆக இருந்த நிலையில் இன்று 42 ஆக குறைந்துள்ளது.
நெல்லையில் 3 பேருக்கும், தென்காசியில் ஒருவருக்கும் இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.