July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

தேசிய பங்கு சந்தையை ஆட்டிப்படைத்த சாமியார் யார் என்பது வெட்டவெளிச்சமானது

1 min read

Who is the preacher who haunted the national stock market is cutting edge

12.3.2022
தேசிய பங்கு சந்தையை ஆட்டிப்படைத்த மர்ம சாமியார் யார் என்ற உண்மையை சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ போட்டுடைத்து உள்ளது.

பங்கு சந்தை முறைகேடு

தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி கூறியது.

இந்த நிலையில், தேசிய பங்கு சந்தை விவரங்களை கசியவிட்டதாக எழுந்த குற்றச்சாட்டு காரணமாக முன்னாள் தலைமை செயலதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நரேன் மற்றும் அவரது சகோதரர் ஆனந்த் சுப்பிரமணியம் ஆகியோருக்கு எதிராக மத்திய புலனாய்வு பிரிவு (சி.பி.ஐ.) கடந்த பிப்ரவரி 18ந்தேதி லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியது.

கைது

இதன் தொடர்ச்சியாக, தேசிய பங்கு சந்தை முறைகேடு வழக்கில் அதன் முன்னாள் மேலாண் இயக்குனரான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு ஆலோசகராகவும், முன்னாள் செயலாக்க அதிகாரியாகவும் செயல்பட்டு வந்தவர் என கூறப்படும் ஆனந்த் சுப்பிரமணியம், சி.பி.ஐ. அதிகாரிகளால் கடந்த மாதம் 24ந்தேதி இரவு சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் கூடுதலாக இருவருக்கு தொடர்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. இதன்படி, ஆனந்திடம் தொடர்ந்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

இமயமலை சாமியார்

யார் அந்த இமயமலை யோகி என்ற விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகின்றது. இதற்கிடையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் அந்த இமயமலை சாமியார் என தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் தான் ஆனந்த் சுப்ரமணியனை கைது செய்து டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

இந்த நிலையில் ஆனந்த் சுப்ரமணியன் தான் இமயமலை சாமியார் எனவும், அவர் தான் சாமியார் போல் நடித்துள்ளதாகவும், அவரிடம் தெரிந்தே சித்ரா ராமகிருஷ்ணன் பல ரகசிய தகவல்களை பகிர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல மர்மமான சாமியார் வேடத்தில் உள்ள ஆனந்த் சுப்ரமணியனே பங்கு சந்தை முடிவுகளிலும் தலையிட்டுள்ளார். சுப்ரமணியனுக்கு ஜாமின் வழங்க கூடாது என்றும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள் அழிப்பு

மேலும் இந்த மோசடி தொடர்பாக 832 ஜிபி தகவல்களை திரட்டியுள்ளதாகவும், சில தகவல்களை அழிக்கப்பட்டுவிட்டதாகவும் சிபிஐ தெரிவித்துள்ளது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் சுப்ரமணியனுக்கு ஜாமீன் வழங்கும் தனது உத்தரவை மார்ச் 24ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.