12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி
1 min read
Coronavirus vaccination for children 12 to 14 years of age from the next day
14.3.2022
12 முதல் 14 வயதுடைய சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை மந்திரி கூறினார்.
கொரோனா தடுப்பூசி
நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
இதற்கிடையே, முன்களப் பணியாளர்கள் உள்பட 2.12 கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் முதல்..
இந்நிலையில், இந்தியாவில் 12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு நாளை மறுநாள் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்.
மேலும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார்.