மூத்த குடிமக்களுக்கான ரெயில்வே டிக்கெட் சலுகை கிடையாது- ரெயில்வே மந்திரி அறிவிப்பு
1 min read
No Railway Ticket Offer for Senior Citizens- Railway Minister Announcement
17.3.2022
மூத்த குடிமக்களுக்கான ரெயில்வே டிக்கெட் சலுகையை தொடரும் திட்டம் இல்லை என்று ரெயில்வே மந்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக ரெயில்வே துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில்வே துறையில் வழங்கப்பட்டு வந்த பல்வேறு சலுகைகள், கொரோனா தொற்று பரவலின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று பெருமளவு குறைந்து வந்தாலும், ரெயில்வே துறையில் கொரோனா தொற்றால், ஏற்பட்ட பெருமளவு வருவாய் இழப்பை ஈடுகட்டும் வகையில் மூத்த குடிமக்களுக்கான டிக்கெட் விலை குறைப்பு உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்கும் வழங்கப்பட்டு வந்த சலுகைகளை மீண்டும் தொடரும் எண்ணம் தற்போது இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ரெயில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளில் நோயாளிகள், மாணவர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட 15 சலுகைகள் மட்டும் தொடர்ந்து வழங்கப்படும் என்றும் மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.