June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

படுக்கை அறையில் கணவர் கேமரா வைத்தால் பெண் பத்திரிகையாளர் தற்கொலை

1 min read

Female journalist commits suicide if husband puts camera in bedroom

15.3.2022
கணவர் சந்தேகப்பட்டு படுக்கை அறையில் கேமிரா வைத்தால் பெண் பத்திரிகையாளர் தற்கொலை செய்து கொண்டர்.

பெண் பத்திரிகையாளர்

கேரளா காசர்கோடு பகுதியைச் சேர்ந்தவர் சுருதி( வயது 36). சுருதி பெங்களூரூவில் ஒரு பிரபல பத்திரிகையில் சீனியர் உதவி ஆசிரியராக பணியாற்றி வந்தார். சுருதிக்கும் கேரளா தலிப்பரம்பு பகுதியைச் சேர்ந்த அனீஸ் என்பவருக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணமான முதல் நாளிலிருந்தே அனீஸ் சுருதியிடம் சந்தேகத்துடன் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. படுக்கையறைக்குள் கேமிரா வைப்பது, வாய்ஸ் ரெக்கார்டர் வைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல் குடும்ப சண்டையின் பொழுது இரண்டு முறை சிருதியை கொலை செய்யவும் அனீஸ் முயன்றுள்ளார்.

தற்கொலை

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பலமுறை சுருதியின் தயார் செல்போனில் அழைத்த போதும் சுருதி செல்போனை எடுக்கவில்லை. இதனால் பயந்துபோன அவரின் தயார் அவர் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலாளிக்கு போன் செய்து தெரிவித்துள்ளார்.
காவலாளி சென்று பார்க்கும் போது சுருதி தங்கியிருந்த வீட்டில் கதவு உள்பக்கம் தாளிடப்பட்டிருந்த நிலையில் கதவை திறக்கவில்லை. இதனால் பால்கனி வழியாக சென்று கதவை உடைத்து பார்த்த பொழுது சுருதி தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக சுருதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் புகார் தெரிவித்த நிலையில் சைக்கோ கணவன் அனீஸ் மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

சுருது எழுதிய கடிதம் ஒன்றையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவரது கணவரின் சித்திரவதை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி உள்ளார். இது குறித்து பெங்களூரு நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.