“மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது” -இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தல்
1 min read
“Fishermen should not be treated harshly” – India’s insistence on Sri Lanka
27/3/2022
மீனவர்களிடம் கடுமையான முறையில் நடந்து கொள்ளக் கூடாது என்று இலங்கையிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
மீனவர்கள்
மீன்வளம் குறித்து இந்தியா – இலங்கை அதிகாரிகள் பங்கேற்ற 5-வது கூட்டுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா தரப்பில் மீன்வளத்துறை செயலாளர் ஜகிந்திரநாத் தலைமையிலான குழு கலந்து கொண்டது. இதில் இலங்கை தரப்பில் மீன்வளத்துறை மந்திரியின் செயலாளர் ரத்தன்நாயக பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில் தமிழக மீனவர்கள் தொடர்பாக விரிவாக பேசப்பட்டன. அப்போது கடலில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களிடம் இலங்கை படை வீரர்கள் கடுமையாக நடந்து கொள்ளக் கூடாது என இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.