“மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை”; பிரதமர் அலுவலகம் விளக்கம்
1 min read
“Mahinda Rajapaksa did not resign”; Prime Minister’s Office Description
3/4/2022
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.
மகிந்த ராஜபக்சே
இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
இதனால் மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கிவிட்டனர். பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்கள் நடத்த இருந்த நிலையில், இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்தநிலையில் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே நாளை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளநிலையில், இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்யவில்லை என பிரதமர் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்ததாக தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.