June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

1 min read

Prime Minister Modi congratulates Grammy Award winning Indian-American singer Balkuni Shaw

5/4/2022

கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .

கிராமி விருது

இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.

இந்த விழாவில், சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை, ‘எ கலர்புல் வோர்ல்டு’ ஆல்பத்திற்காக இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷா பெற்றார்.

சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பம் பிரிவில் 2 முறை கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட இந்தியாவை பூர்வீகமாக கொண்ட ஒரே பெண்மணி, பால்குனி ஷா ஆவார்.

மோடி வாழ்த்து

இந்நிலையில் கிராமி விருது வென்ற இந்திய-அமெரிக்க பாடகி பால்குனி ஷாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார் .

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கிராமி விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசை ஆல்பத்திற்கான விருதை வென்ற பால்குனி ஷாவிற்கு வாழ்த்துகள். எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.