June 28, 2025

Seithi Saral

Tamil News Channel

“இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்” இடம்பிடித்த இளம் சாதனையாளர்கள்

1 min read

Young Achievers in the “India Book of Records”

5.4.2022
2 வயது குழந்தைகள் உட்பட “இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்சில்” இடம்பிடித்த இளம் சாதனையாளர்கள் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.

சாதனையாளர்கள்

‘இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்’ என்பது தொடர் சாதனைகள் படைத்து வரும் மனிதர்கள் மற்றும் புதிய சாதனைகளை முறியடிக்க விரும்புபவர்களிடையே புகழ்பெற்றது. தங்கள் திறமைகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு செல்வதில் வெற்றி பெற்றவர்களிடம் இது கின்னஸ் சாதனை புத்தகம் போல இந்திய அளவில் புகழ்பெற்று விளங்குகிறது.

இது அவர்களுக்கு பல வழிகாட்டுதல்களை வழங்குகிறது. சாதனையாளர்கள் ஒரு தனி அடையாளத்தை உருவாக்கவும், அவர்கள் சிறந்த வெற்றியை நோக்கி செல்லவும் அவர்களுக்கு வெற்றிகரமாக வழிகாட்டுகிறது.

இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸின் தொடர்ச்சியான வழிகாட்டுதலின் கீழ், பின்வரும் பாராட்டுக்களும் சாதனை பதிவுகளும் இடம் பிடித்துள்ளன.

இவர்கள் அனைவரும் சிறுவயதிலேயே குறிப்பிடும்படியான சாதனைகளை நிகழ்த்தி, சமீபத்தில் இந்தியா சாதனை புத்தகத்தில்(இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்) நுழைந்தவர்கள்.

இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸின் புதிய திறமைசாலிகள் சிலர் விவரம் வருமாறு:-

  1. இரண்டு வயது குழந்தை ஒன்று வழக்கத்தை விட முன்னதாகவே திறன்களைக் வெளிக்காட்டி சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

தீஷாங்க் மல்லிகார்ஜுனா எஸ், ஜூன் 25, 2020 அன்று கர்நாடகாவின் சிவமொகாவில் பிறந்தவர். அவர் பிறந்து 1 வருடம் மற்றும் 7 மாதமே ஆன நிலையில், அவர் இந்த இளம் வயதிலியேயே 5 பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளித்ததற்காக பாராட்டப்பட்டுள்ளார்.

மேலும், 14 வடிவங்கள், 11 வண்ணங்கள், 39 விலங்குகள், 16 வாகனங்கள், 20 நாடுகளின் கொடிகள், உடலின் 11 பாகங்கள், 18 காய்கறிகள் ஆகியவற்றைக் கண்டறிந்ததற்காக அவர் பாராட்டப்பட்டுள்ளார். வாரத்தின் நாட்கள் மற்றும் ஒரு வருடத்தில் உள்ள மாதங்களை ஆங்கிலம் மற்றும் கன்னடத்தில் வாசிப்பதற்காகவும் பாராட்டப்பட்டுள்ளார். ஆங்கிலத்தில் 1-20 மற்றும் கன்னடத்தில் 1-10 வரையிலான எண்கள் மற்றும் 4 நர்சரி பாடல்கள் ஆகியவற்றை வாசித்து சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

  1. நியான்ஷ் எஸ், ஜூலை 2, 2020 அன்று பெங்களூருவில் பிறந்தவர். அவர் பிறந்து 1 வருடம் மற்றும் 8 மாதங்களே ஆன நிலையில், 20 பழங்கள், 13 பூக்கள், 19 செயல் வார்த்தைகள், 19 காய்கறிகள், 24 தொழில்கள், 13 வடிவங்கள், 22 வாகனங்கள், உடலின் 25 பாகங்கள், 21 விலங்குகள், 12 வண்ணங்கள், 6 எலக்ட்ரானிக் பொருட்கள், 17 பறவைகள், 10 ஆடைகள்,24 நாடுகளின் மருத்துவ பொருட்கள் மற்றும் கொடிகள், என அடையாளம் காட்டியதற்காக அவர் பாராட்டப்பட்டு சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.
  2. சுஜன் குருராஜ் அக்டோபர் 5, 2012 இல் பெங்களூருவில் பிறந்தவர். அவர் பிறந்து 9 வயது, 4 மாதங்களே ஆன நிலையில், 44 வார்த்தைகளை பின்னோக்கி உச்சரித்து அசத்துகிறார். 25 வார்த்தைகளை பின்னோக்கி உச்சரித்தும், 6 வாக்கியங்களை பின்னோக்கிப் பேசியதற்காகவும் அவர் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.