July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

டெல்லியில் நடந்த யோகா பெருவிழாவில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்பு

1 min read

Ambassadors of various countries participate in the Yoga Festival in Delhi

7.4.2022
டெல்லியில் நடந்த யோகா பெருவிழா கொண்டாட்டத்தில் பல்வேறு நாடுகளின் தூதர்கள் பங்கேற்றனர்.

யோகா பெருவிழா

உலக சுகாதார தினமாம் ஏப்ரல் 7-ந் தேதியான இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி இன்று டெல்லி செங்கோட்டையில் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் யோகா பெருவிழா கொண்டாடப்பட்டது.
சர்வதேச யோகா தினத்திற்கு 75 நாட்களுக்கு முன் உலக சுகாதார தினமான (ஏப்ரல் 7) இன்று காலை 6.30 மணி முதல் 8.00 மணி வரை டெல்லியில் உள்ள செங்கோட்டையில், ஆகஸ்ட் 15 பூங்கா பின்னணியில், யோகா பெருவிழா எனும் பிரமாண்டமான நிகழ்ச்சிக்கு ஆயுஷ் அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது.

தூதர்கள்

இந்த நிகழ்ச்சியில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமை விருந்தினராக பங்கேற்றார். மத்தியமந்திரிகள் கிஷான் ரெட்டி, சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட பல மத்திய மந்திரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், டெல்லியில் உள்ள பல்வேறு நாடுகளின் தூதர்கள், பிரபல விளையாட்டு ஆளுமைகள், யோகா குருக்கள் என பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

யோகா நிகழ்ச்சி குறித்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறுகையில், “நான் எனது வாழ்த்துக்களையும், உலக ஆரோக்கியத்திற்காகவும் வாழ்த்துகிறேன். யோகா நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையாகும்.
‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ தொடர்பாக சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்பாகவே இந்த யோகா பயிற்சியை இன்று வைத்துள்ளோம்” என்றார்.

இஸ்லாமிய நாடுகள்

“யோகா அனைவருக்கும் நன்மை பயக்கும், அதை தினமும் பயிற்சி செய்வது முக்கியம். கிறிஸ்தவ, இஸ்லாமிய நாடுகள் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன. அவர்களும் இன்று கொண்டாடுகிறார்கள்” என்று இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய மந்திரி கிஷான் ரெட்டி தெரிவித்தார்.

இந்தியாவில் யோகாவை செயல்படுத்திடும் யோசனையை இந்திய அரசு எவ்வாறு செயல்படுத்தியுள்ளது என்பதை நான் பாராட்டுகிறேன் என்று இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் பாம் சான் சாவ் கூறினார்.

அமைதி

உக்ரைன்-ரஷியா போர் குறித்து, இந்நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்த உலக நாடுகளின் தூதர்கள் கூறியதாவது:-

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஐரோப்பிய கமிஷனின் இயக்குனர் பியர்ரிக் பில்லன்-ஆஷிடா கூறுகையில், “யோகா பயிற்சி மற்றும் இந்திய கலாச்சாரத்தை பரப்புவது முக்கியம். உக்ரைன் நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் நாம் அனைவரும் ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் மன அழுத்தத்தைப் பகிர்ந்து கொள்கிறோம். நமக்கு அமைதி தேவை, போர் அல்ல. போரால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் அமைதி கிடைத்திட விரும்புகிறேன், குறிப்பாக உக்ரைனில் உள்ள நம் நண்பர்களுக்கு” என்றார்.

“உக்ரைனில் ஒரு வேதனையான சூழ்நிலை உள்ளது. இரு நாடுகளுடனும் (ரஷியா மற்றும் உக்ரைன்) எங்களுக்கு மிக நீண்ட வரலாற்றுத் தொடர்பு உள்ளது. நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு தீர்வு கொண்டுவரப்படும் என்று நம்புகிறோம்” என்று இந்தியாவுக்கான செர்பியா தூதர் சினிசா பாவிக் வருத்தத்துடன் தெரிவித்தார்.
“வெனிசுலா அமைதி போக்கை கடைபிடிக்கும் நாடு. அமைதி மற்றும் பேச்சுவார்த்தை மூலம் அனைத்து சர்ச்சைகளுக்கும் தீர்வு காண நாங்கள் எப்போதும் அழைப்பு விடுக்கிறோம்” என்று இந்தியாவுக்கான வெனிசுலா தூதர் கொரோமோட்டோ கோடோய் கால்டெரோன் கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.