2 கலைக் கல்லூரிகளுக்கு கருணாநிதி பெயர்- அரசாணை வெளியீடு
1 min read
Karunanidhi Name for 2 Art Colleges – Government Publication
12.4.2022
புதுக்கோட்டை, குளித்தலை அரசு கலைக்கல்லூரிகளுக்கு பெயர் மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
கருணாநிதி பெயர்
தமிழகத்தில் உள்ள 2 கல்லூரிகளுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயர் சூட்டி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கரூர் மாவட்டத்தின் குளித்தலையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு “டாக்டர் கலைஞர்”அரசு கலைக்கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதுபோல புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு மகளிர் கலைக் கல்லூரிக்கு “கலைஞர் கருணாநிதி” அரசு மகளிர் கலைக் கல்லூரி எனப் பெயர் சூட்டி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.