குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
1 min read
Prime Minister Modi unveiled the 108-foot-tall statue of Hanuman in Gujarat
16.4.2022
குஜராத்தில் 108 அடி உயர அனுமன் சிலை! பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
அனுமன் சிலை
குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாபு கேசவானந்த் ஆசிரமத்தில் 108 அடி உயர அனுமன் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இன்று அனுமன் ஜெயந்தியையொட்டி குஜராத் மாநிலம் மோர்பியில் 108 அடி உயர அனுமான் சிலையை, காலை 11 மணியளவில் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
நாடு முழுவதும் நான்கு திசைகளில் அமைக்கப்படவிருக்கும் 4 சிலைகளில் இது இரண்டாவது சிலையாகும். இது மேற்கு பக்கத்தில் மோர்பியில் உள்ள பரம் பூஜ்ய பாபு கேசவானந்ஜி ஆசிரமத்தில் நிறுவப்பட்டுள்ளது.
அனுமன் வாழ்க்கையுடன் தொடர்புடைய நாட்டின் 4 திசைகளிலும் உள்ள ஊர்களில் அனுமன் சிலை உருவாக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது. முதலில், வடதிசையில் இமாசலபிரதேச மாநிலம் சிம்லாவில் 2010-ம் ஆண்டு அனுமன் சிலை திறக்கப்பட்டது. மேற்கு திசையில், இந்த சிலை இன்று திறக்கப்பட்டது. தெற்கே ராமேஸ்வரத்தில் அனுமன் சிலை நிறுவும் பணி தொடங்கியிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, “இது வெறும் அனுமன் சிலைகள் அமைப்பதற்கான தீர்மானம் அல்ல, இது ‘ஒரே பாரதம் ஷ்ரேஷ்ட பாரதம்’ தீர்மானத்தின் ஒரு பகுதியாகும்” என்றார்.
முன்னதாக இன்று வடமாநிலங்களில் அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுவதையொட்டி, பிரதமர் மோடி கூறிய வாழ்த்துச் செய்தியில், “பவன்புத்திரனின் அருளால், அனைவரின் வாழ்வும் எப்போதும் வலிமை, புத்திசாலித்தனம் மற்றும் அறிவு நிறைந்ததாக இருக்கட்டும்” என்றார்.