டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறையில் 14 பேர் கைது
1 min read
14 arrested for violence during Hanuman Jayanti procession in Delhi
17.4.2022
டெல்லியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
அனுமன் ஜெயந்தி
டெல்லி ஜஹாங்கீர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது நேற்று இரு பிரிவினர் இடையே மோதல் வெடித்தது. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த வன்முறை குறித்து விசாரிக்க 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
வன்முறை தொடர்பாக இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி முதல் மந்திரி அரவிந்த கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அணில் பைலாலை சந்திக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜனதா, சம்பவத்தின் பின்னணியில் சதி இருப்பதாக கூறியுள்ளது.
இந்த சம்பவத்தின் பின்னணியில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா வீடியோ செய்தியில் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைது
மதபேரணியின் போது ஏற்பட்ட வன்முறையில் துப்பாக்கி நடத்தியவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். ஜகாங்கீர்பூரியின் சிடி பார்க் பகுதியை சேர்ந்த 21 வயதான அஸ்லாம் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அஸ்லாமிடமிருந்து துப்பாக்கி ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், வன்முறை மேலும் பரவாமல் இருக்கவும், அமைதியை நிலைநாட்டவும் இரு தரப்பினருக்கும் இடையே போலீஸ் உயர் அதிகாரிகள் முன்னிலையில் அமைதிப்பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.