தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain in Tamil Nadu tomorrow
17.4.2022
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
கனமழை
வட தமிழக கடலோர பகுதிகளில் மேல் நிலவும் கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக நாளை தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
19-ந் தேதி
19.4.2022 அன்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், மாவட்டங்களில் ஒரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
20.4.2022 அன்று வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென் தமிழகம் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் மாவட்டங்களில் ஒரிரு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.