கொடநாடு கொலை- கொள்ளை வழக்கில் சசிகலாவிடம் நாளை விசாரணை
1 min read
சசிகலா
Sasikala to be tried tomorrow in Kodanadu murder-robbery case
20.4.2022
கொடநாடு கொலை-கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடம் தனிப்படை போலீசார் நாளை விசாரணை நடத்த உள்ளனர்.
கொடநாடு கொலை
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு பகுதியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017ம் ஆண்டு காவலாளியை கொலை செய்து, ஒரு மர்ம கும்பல் பங்களாவில் உள்ள பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கொடநாடு கொள்ளை, கொலை வழக்கில் சயான், வாளையாறு மனோஜ், கனகராஜின் சகோதரர் தனபால், உறவினர் ரமேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு குறித்து கடந்த 5 ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது.
இதற்கிடையே இந்த வழக்கு தொடர்பாக போலீசார் நடத்திய சோதனையில், கொடநாடு எஸ்டேட்டில் காணாமல் போனதாக கூறப்படும் சில நிலப்பத்திரங்கள், சசிகலாவுக்கு சொந்தமான இடங்களிலும், சென்னையில் உள்ள ஒரு ஓட்டல் அறையில் இருந்தும் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து நாளை (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கு மண்டல ஐஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார், இன்று சசிகலாவிடம் விசாரணை நடத்த உள்ளனர்.