நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 15ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
1 min read
Extension of opportunity till May 15 to apply for NEET examinatio
2.5.2022
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காலஅவகாசம் வரும் 15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் ஜூலை 17 -ம் தேதி நடைபெறவுள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் செயல்முறை கடந்த ஏப்ரல் 6ம் தேதி முதல் தொடங்கியது.
மாணவர்கள் விண்ணப்பங்களை neet.nta.nic.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து விண்ணப்பதாரர்களும், உரிய கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்ப படிவங்களை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு வரும் 6-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதன்படி https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வரும் 15-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு இதுவரை 14 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.