கொரோனா தடுப்பூசியை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
1 min read
Should not be forced to pay for corona vaccine- Supreme Court order
2.5.2022
தடுப்பூசி செலுத்துமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தடுப்பூசி
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக கடந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. தொற்று பரவலுக்கு எதிரான மிகப்பெரிய பேராயுதமாக தடுப்பூசி கருதப்படுவதால், தடுப்பூசி செலுத்த மக்களை மத்திய மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன. அந்த வகையில், நாட்டில் இதுவரை 1,89,23,98,347 பேருக்குகொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனை விவரங்களை வெளியிட உத்தரவிடுமாறு சுப்ரீம் கோர்ட்டில் ஜகேப் புலியெல் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பித்த சுப்ரீம் கோர்ட், “ தடுப்பூசி செலுத்துமாறு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட் மேலும் தனது உத்தரவில் கூறியிருப்பதாவது: –
தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகவே உள்ளது. உரிய உத்தரவுகளை பின்பற்றுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். தடுப்பூசி செலுத்தாத தனி நபர்களுக்கு எதிராக எந்த கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது. அதுபோன்று ஏதேனும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தால், அதை திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.