’2024 மோடி ஒன்ஸ்மோர்’ என்று ஜெர்மனியில் இந்தியர்கள் முழக்கம்
1 min read
Indians in Germany chanted ‘2024 Modi Oncemore ‘
3.5.2022
ஜெர்மனிக்கு பிரதமர் மோடி சென்றபோது அங்குள்ள இந்தியர்கள் ’2024 மோடி ஒன்ஸ்மோர்’ என்று முழக்கமிட்டனர்.
ஜெர்மனியில் மோடி
ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். இந்த பயணத்தின் முதல் நாடாக நேற்று முன்தினம் அதிகாலையில் அவர் ஜெர்மனி போய் சேர்ந்தார்.
தலைநகர் பெர்லினில் உள்ள அதிபர் மாளிகையில் பிரதமர் மோடிக்கு ராணுவ அணிவகுப்புடன் கூடிய பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு அவரை பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் வரவேற்றார்.
ஆலோசனை
பின்னர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் பிரதமர் மோடி இருவரும் நேருக்குநேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
ஒன்ஸ்மோர் மோடி
முன்னதாக, பெர்லினில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றினார். இதற்காக விழா நடைபெறும் அரங்குக்கு வந்த பிரதமர் மோடியை,’ 2024- மோடி ஒன்ஸ்மோர்’ என்ற கோஷத்துடன் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ’உங்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜெர்மனியின் பல நகரங்களில் இருந்து நீங்கள் வருகை தந்துள்ளீர்கள்.
இன்று என்னைப் பற்றியோ மோடி அரசைப் பற்றியோ நான் பேசப்போவது இல்லை. மாறாக கோடிக்கணக்கான இந்தியர்களின் திறன்கள் பற்றியும் அவர்களை புகழ்ந்து பாடவும் விரும்புகிறேன். கோடிக்கணக்கான இந்தியர்களை பற்றி நான் பேசும் போது, இந்தியாவில் வசிக்கும் இந்தியர்கள் மட்டும் அல்ல.. இங்கு(ஜெர்மனி) வசிக்கும் இந்தியர்கள் பற்றியும் சேர்த்தே பேசப்போகிறேன்” என்றார்.