66 வது வயதில் 38 வயது டீச்சரை 2-வது திருமணம் செய்துகொண்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்
1 min read
The former cricketer, who was married for the second time to a 38-year-old teacher at the age of 66
3.5.2022
66 வது வயதில் 38 வயது டீச்சரை முன்னாள் கிரிக்கெட் வீரர் 2-வது திருமணம் செய்துகொண்டார்.
கிரிக்கெட் வீரர்
இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால்(வயது 66). தற்போது மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ளார். இவர் தனது நீண்ட நாள் தோழி புல் புல் சாஹாவை (38 வயது) நேற்று திருமணம் செய்துகொண்டார்.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. கிரிக்கெட் வீரரான அருண் லாலுக்கு ஏற்கனவே ரீனா என்ற மனைவி உள்ளார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர். இருப்பினும், விவாகரத்து பெற்ற பின்னும் முதல் மனைவியான ரீனாவுக்கு உடல்நலக்குறைவு உள்ளதால் அவரை அருண் லால் நீண்ட காலமாக கூடவே இருந்து கவனித்து வருகிறார்.
முதல் மனைவி ஒப்புதல்
இந்த நிலையில், தனது முதல் மனைவி ரீனாவின் ஒப்புதலுடன் அருண்லால் தனது நீண்ட நாள் தோழியான புல் புல் சாஹாவை 2-வதாக திருமணம் செய்துகொண்டார். திருமணத்திக்கு பின்னர், அருண் லால் – புல்புல் தம்பதி நோய்வாய்ப்பட்ட ரீனாவை கவனித்துக்கொள்ள உள்ளனர்.
புதியதாக திருமணம் செய்து கொண்டுள்ள அருண் லால் – புல்புல் சாஹா ஜோடியை பலரும் வாழ்த்தி வருகின்றனர்.