வணிகர்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம்-வெள்ளையன் வேண்டுகோள்
1 min read
Do not paint politicians as political-white man’s plea
5.5.2022
வணிகர்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வேண்டுகோள் விடுத்தார்.
வணிகர் சங்க விழா
சென்னை மணலியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மணலி சேக்காடு பொது வியாபாரிகள் சங்க 39வது வணிகர் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்
திருமண மண்டபத்தில் அப்பகுதியைச் சார்ந்த வியாபாரிகள் தங்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு நடனம் நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்
அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த வெள்ளையன் கூறியதாவது:-
வணிகர்கள் வணிக தின கொண்டாட்டத்தில் மகாத்மா காந்தி, வ.உ. சிதம்பரனார் ஆகியோரின் உருவப்படங்களை வைத்து சுதேச உறுதிமொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பாக அனைத்து வணிகர்களும் தற்பொழுது சுதேச உறுதிமொழியை ஏற்று வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக மணலி சேக்காடு வியாபாரி சங்கத்தில் உயிரிழந்த வியாபாரிகளின் உருவப் படத்தை வைத்து மலர் அஞ்சலி செலுத்தி இருக்கிறோம்.
வணிகர்கள் ஜாதி மதம் அரசியல் ஆகியவற்றை தாண்டி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறோம். அரசியல்வாதிகள் வணிகர்களை தங்கள் பக்கம் வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்., வணிகர்களுக்கு அரசியல் சாயம் பூச வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்
பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு காரணமாக வணிகர்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும் இருப்பினும் போராட்டத்தை கையில் எடுக்காமல் அமைதியான முறையில் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் தேவைப்பட்டால் பெரிய அளவில் விலைவாசி ஏற்றத்தை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்