டாக்டாக்டர் அம்பேத்கர் விருது’ பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்வு
1 min read
Dr. Ambedkar Award’s prize money increased to Rs. 5 lakhs
6.5.2022
டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அம்பேத்கர் விருது
கடந்த 1995 ஆம் ஆண்டில் இருந்து திருவள்ளுவர் தினத்தன்று, தமிழக அரசு சார்பில் ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக உழைப்பவர்களை கவுரவிக்கும் விதமாக தமிழக அரசு இந்த விருதினை வழங்கி வருகிறது.
இந்த விருதுக்கான பரிசுத்தொகை ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு முதல் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத்தொகை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.