பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம்- கவர்னர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு
1 min read
Popular Front of India is a very dangerous movement- Governor RN Ravi’s agitation
6.5.2022
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கவர்னர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
கவர்னர்
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில், நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு, மறைந்த லெப்டினன்ட் ஜெனரல் சுப்ரோடோ மித்ரா எழுதிய ‘THE LURKING HYDRA’ என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
விழாவில் பேசிய ஆளுநர், இந்தியாவில் சமூக அமைதியை குலைக்க சில அமைப்புகள் முயற்சித்து வருவதாக குறிப்பிட்டார். ‘பாப்புலர் பிரண்ட் ஆப்’ இந்தியா மிகவும் ஆபத்தான இயக்கம் என்று கூறிய அவர், மனித உரிமை அமைப்பு போல செயல்பட்டு ஆப்கானிஸ்தான், சிரியாவுக்கு இந்த அமைப்புதான் சண்டையிட ஆட்களை அனுப்புகிறது என்று பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மாணவர்கள், மனித உரிமை இயக்கம், அரசியல் இயக்கம் என பல முகமூடிகளை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அணிந்து இயங்கி வருவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
இந்திய ராணுவத்தின் சிறப்பு குறித்த புத்தகம் எதுவும் இதுவரை இல்லாமல் இருந்தது என்றும், இந்தப் புத்தகம் சிறந்த ஆவணமாக இருக்கும் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்