ஓராண்டு ஆட்சி நிறைவு: மு.க.ஸ்டாலினுக்கு, கவர்னர் வாழ்த்து
1 min read
புதிய கவர்னர் ஆர்.என்.ரவி
Completion of one year rule: Governor congratulates MK Stalin
7.5.2022
மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பில் ஓராண்டு நிறைவு செய்ததை அடுத்து அவருக்கு, கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் ஆட்சி
முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று முதலாம் ஆண்டை நிறைவு செய்து, நேற்று 2-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். கடந்த ஓராண்டில் ஏராளமான மக்கள் நலத்திட்டங்களை மு.க.ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார்.
முதல்-அமைச்சராக ஆட்சி பொறுப்பில் முதல் ஆண்டை நிறைவு செய்த மு.க.ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கவர்னர் ஆர்.என்.ரவியும், மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமிழக கவர்னர் மாளிகையின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பதிவில், “ஆட்சியின் முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அனைத்து அமைச்சர்களுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவி தனது அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்” என்று கூறப்பட்டுள்ளது.
கவர்னரின் வாழ்த்துக்கு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.