திருவள்ளூரில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை – 5 பேர் போலீசில் சரண்
1 min read
Famous rowdy murdered in Tiruvallur – 5 people surrender to the police
9.5.2022
பொன்னேரி அருகே ரவுடியை மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த நிலையில் 5 பேர் போலீசில் சரணடைந்தனர்.
கொலை
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள வேண்பாக்கம் பள்ளம் பகுதியில் வசிப்பவர் ஜவகர் (வயது 31) ரவுடியான இவருக்கு திருமணமாகி சினேகா (25) என்ற மனைவியும் இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மாதம் 26-ஆம் தேதி கஞ்சா மற்றும் நாட்டுத்துப்பாக்கி வீட்டில் வைத்திருந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவில் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் ஜவகர் வந்து கொண்டிருப்பதாக அதே பகுதியை சேர்ந்த விஜி மற்றும் அவரது கூட்டாளிகள் தெரியவந்தது. பின்னர் விஜி மற்றும் கூட்டாளிகள் 5 பேரும் மறைந்திருந்த நிலையில் நேற்று இரவில் ஜவகர் மற்றும் அவரது உறவினரான சிகனை சுற்றி வளைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி சாய்த்தனர். கீழே விழுந்த ஜவகர் ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இந்த சம்பவத்தில் சிகனுக்கு கை மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் 5 பேர் கொண்ட கும்பல் தப்பி தலைமறைவானது.
தகவலறிந்த பொன்னேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பலத்த காயமடைந்த சிகனை காப்பாற்றிய சென்னை ஸ்டான்லி மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் சாரதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஜவகர் மீது கொலை மற்றும் கஞ்சா உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் முன் விரோதத்தால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
5 பேர் கைது
இந்நிலையில் ஜவகரை வெட்டி படுகொலை செய்ததாக கூறி பள்ளம் பகுதியைச் சார்ந்த விஜி (38), மொட்டைகார்த்திக் (22), ஆட்சி என்கிற ராஜவேலு (25), வசந்த் (23), சூர்யா (29) ஆகிய 5 பேர் பொன்னேரி போலீசில் சரணடைந்த கூறப்படுகிறது.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்ட 5 பேரும் பொன்னேரி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.