அசானி புயல் திசை மாறியது; காகிநாடா கடலோரம் அருகே கரையை தொடும்
1 min read
Asani storm changed direction; Kaginada touches the coast near the coast
10.5.2022
அசானி புயல் திசை மாறி காகிநாடா கடலோரம் அருகே கரையை தொடும் என விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது.
அசானி புயல்
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது.
அசானி புயல் காரணமாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் கனமழை பெய்து வருகிறது. ஆந்திராவில் வட கடலோர மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை முதல் மிக கனமழையானது பெய்து வருகிறது.
அசானி புயல் காரணமாக மோசமான வானிலை நிலவுவதால், விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையத்தில் மொத்தம் 27 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. சென்னையிலும் 10 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அசானி புயல் காகிநாடா கடலோரம் அருகே கரையை தொடும் என விசாகப்பட்டினம் புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்து உள்ளது. இதுபற்றி அந்த மையத்தின் இயக்குனர் சுனந்தா கூறும்போது, காகிநாடா கடலோரம் கரையை தொட்ட பின்னர், காகிநாடா மற்றும் விசாகப்பட்டினம் இடையே மீண்டும் கடலுக்கு திரும்பும்.
ஆந்திர பிரதேசத்திற்கு சூறாவளி எச்சரிக்கை மற்றும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. நேற்றுவரை வடகிழக்கு திசையை நோக்கி புயல் செல்கிறது என காட்டப்பட்டது. ஆனால், கடந்த 6 மணிநேரத்தில் வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி புயல் பயணிக்கிறது. இதனால், ஆந்திர பிரதேச கடலோரத்திற்கு மிக நெருங்கிய தொலைவில் அசானி புயல் உள்ளது என அவர் கூறியுள்ளார்.