July 3, 2025

Seithi Saral

Tamil News Channel

வரும் காலத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் டிரோன் பைலட்டுகள் தேவை

1 min read

India needs one lakh drone pilots in the future

10.5.2022
வரும் காலத்தில் இந்தியாவில் ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவைப்படும் என்ற மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறினார்.

டிரோன்கள்

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய விமானப் போக்குவரத்து மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:-

நாங்கள் டிரோன் (ஆளில்லா விமானம்) துறையை மூன்று திட்டத்தின் கீழ் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். முதல் திட்டம் கொள்கை சார்ந்தது. கொள்கையை எவ்வளவு வேகமாக செயல்படுத்துகிறோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இரண்டாவது திட்டம் உற்பத்தியுடன் கூடிய ஊக்கத் தொகையை உருவாக்குவது. மூன்றாவது திட்டம் ட்ரோன் துறையில் உள்நாட்டு தேவையை உருவாக்குது. மத்திய அரசின் 12 அமைச்சகங்கள் இதை செயல்படுத்த உள்ளன.

டிரோன் பைலட் ஆக பணிபுரிய கல்லூரி பட்டப்படிப்பு தேவையில்லை, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால், டிரோன் பைலட் பயிற்சி பெறலாம். 2-3 மாத பயிற்சி பெறும் நபர் டிரோன் விமானியாக வேலை செய்யலாம். இதற்கு மாதம் ரூ.30,000 ஆயிரம் சம்பளம் கிடைக்கும்.

ஒரு லட்சம்

வரும் ஆண்டுகளில் எங்களுக்கு ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகள் தேவை. எனவே இது மிகப் பெரிய வாய்ப்பு. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.