பார்வையற்ற பெண்ணின் வாழ்க்கையை கேட்ட பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டார்
1 min read
Prime Minister Modi was emotional when he heard about the life of a blind woman
12.5.2022
அரசு திட்ட பயனாளர்களுடன் உரையாடும்போது பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டார்.
உரையாடல்
குஜராத்தின் பரூச் நகரில், அரசு வழங்கும் திட்டங்களை பெறும் பயனாளர்களுடனான காணொலி காட்சி வழியேயான உரையாடல் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பயனாளர்களிடம் உரையாடினார்.
அவர் 3 மகள்களை கொண்ட, கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவரிடம் பேசும்போது, உங்களது மகள்களுக்கு கல்வி வழங்குகிறீர்களா? என கேட்டுள்ளார்.
அதற்கு அந்த நபர், தனது மகள்களில் ஒருவர் மருத்துவராக வரவேண்டும் என விரும்புகிறார் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து அவரது மகளிடம் பேசிய பிரதமர் மோடி, மருத்துவ தொழிலை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த மகள், என்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட பாதிப்பினால் இந்த துறையை நான் தேர்வு செய்துள்ளேன் என பார்வையற்ற தனது தந்தையின் நிலையை சுட்டி காட்டும் வகையில் பதிலளித்து உள்ளார்.
உணர்ச்சிவசப்பட்டார்
இந்த பதிலால் உணர்ச்சிவசப்பட்ட பிரதமர் மோடி, ஒரு சில தருணங்கள் அமைதி காத்துள்ளார். அதன் பின்னர், அந்த மகளின் மனஉறுதியை பெரிதும் பாராட்டினார்.
உங்களுடைய கருணையே உங்களுடைய வலிமை என கூறினார். உங்களுடைய மகளது கனவை நிறைவேற்ற ஏதேனும் உதவி உங்களுக்கு தேவையா? என எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் பிரதமர் மோடி கூறினார்.