தமிழ் நாட்டில் 16 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
1 min read
Chance of heavy rain for 4 days in 16 districts of Tamil Nadu
14.5.2022
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.
கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருச்சி, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
நாளை (15ந்தேதி), மற்றும் 16ந்தேதி தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
17, 18ந் தேதிகளில் தமிழ்நாடு , புதுவையில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்துக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.