சிவாஜி கணேசன் சிலைய மணி மண்டபத்தின் வெளிப்புறத்தில் நிறுவ மு.க.ஸ்டாலின் ஆய்வு
1 min read
MK Stalin’s study to install Shivaji Ganesan statue outside the Manimandapam
14.5.2022
சிவாஜி கணேசன் சிலைய மணி மண்டபத்தின் வெளிப்புறத்தில் நிறுவ மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:
சிவாஜி கணேசன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு சென்னை காமராஜர் சாலை மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை சந்திப்பில் 8 அடி உயரமுள்ள முழு உருவச் சிலையை நிறுவி 21.07.2006 அன்று கலைஞர் திறந்து வைத்தார். வழக்கின் காரணமாக அச்சிலை அகற்றப்பட்டு அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் தற்போது நிறுவப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் திருவுருவச் சிலையை, சிவாஜி கணேசனின் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, மணிமண்டபத்தின் வெளிப்புறத்தில் நிறுவுவதற்கான இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவனால் 14.4.2022 அன்று அம்பேத்கரின் 132வது பிறந்த நாளன்று வழங்கப்பட்ட அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை மணிமண்டபத்தில் நிறுவுவதற்கான இடத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது தயாநிதிமாறன் எம்.பி. செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் ஜெயசீலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.