இந்தியாவில் புதிதாக 2,487 பேருக்கு கொரோனா
1 min read
Corona for 2,487 newcomers in India
15.5.2022
இந்தியாவில் புதிதாக 2,487 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தற்போது தினசரி கொரோனா பாதிப்பில் பெரிதான மாற்றம் இல்லை. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,858 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் 2,487 ஆக குறைந்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,31,13,413 ஆக பதிவாகியுள்ளது.
கொரோனா இறப்பு எண்ணிக்கை இன்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் 13 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 5,24,214 ஆக பதிவாகியுள்ளது. கடந்த ஒரே நாளில் 2,878 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர்.
மேலும்,இந்தியாவில் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,25,79,693 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 17,692 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை 1,91,32,94,864 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 15,58,119 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவலை இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது