இலங்கையில் அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு
1 min read
Referendum against the President in Sri Lanka
15.75.2022
இலங்கையில் திடீர் திருப்பமாக அந்த நாட்டு அதிபருக்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
தொடர் போராட்டம்
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் தொடர் போராட்டங்களை அடுத்து மகிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து இலங்கையில் புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் நாளை மறுநாள் மூன்று முக்கிய வாக்கெடுப்புகள் நடைபெற உள்ளன. புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
வாக்கெடுப்பு
இதேபோல், அதிபர் கோத்தபய ராஜபக்ச மீது அதிருப்தி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.