இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,202 பேராக குறைந்தது
1 min read
Daily corona exposure in India dropped to 2,202
18.5.2022
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2,202 பேராக குறைந்தது
இந்தியாவில் கொரோனா
இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் கடந்த சில தினங்களாக சின்னச்சின்னதாய் ஒரு ஏற்றம் இருந்தது. அந்த நிலை இன்று மாறி இருக்கிறது.
கடந்த சனிக்கிழமை 2,858, ஞாயிற்றுக்கிழமை 2,487 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,202 ஆக குறைந்தது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,31,21, 599 லிருந்து 4,31,23,801 ஆக உயர்ந்தது.
இந்தியாவில் ஒரே நாளில் 2,550 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,25,79,693 லிருந்து 4,25,82,243 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 27 பேர் உயிரிழந்தனர். இதுவரை 5,24,241 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17,692 லிருந்து 17,317 ஆனது.
இந்தியாவில் ஒரே நாளில் 3,10,218 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 191.37 கோடி பேருக்கு டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.