நேபாளத்தில் புத்தர் பிறந்த இடத்தில் மோடி வழிபாடு
1 min read
Modi worship at the birthplace of Buddha in Nepal
16.5.2022
நேபாளத்தில் புத்தர் பிறந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.
நேபாளத்தில் மோடி
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேபாளத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று காலை டெல்லியில் இருந்து நேபாளம் வந்தடைந்த பிரதமர் மோடியை நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா வரவேற்றார்.
நேபாள பிரதமரும், இந்திய பிரதமரும் புத்தர் ஞானம் அடைந்த போதி மரத்திற்கு தண்ணீர் ஊற்றி இருவருக்கும் இடையிலான நட்பை வெளிப்படுத்தினர்.
கோவிலை ஒட்டி அமைந்துள்ள அசோக தூண் அருகே இருவரும் தீபம் ஏற்றினர். கி.மு. 249-ல் பேரரசர் அசோகரால் நிறுவப்பட்ட தூண், லும்பினி புத்தர் பிறந்த இடம் என்பதற்கான முதல் கல்வெட்டுச் சான்றாக திகழ்கிறது.
இந்நிலையில், இந்திய பிரதமர் மோடி, நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா ஆகியோ இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது
தற்போதைய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இருதரப்பு கூட்டுறவில் புதிய பகுதிகளை மேம்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
இருதரப்பு பேச்சுவார்த்தைக்குப் பிறகு கலாச்சாரம் மற்றும் கல்வித்துறைகளில் ஒத்துழைப்புக்கான 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.