கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை குறைப்பு
1 min read
Reduction in the cost of the Gorbevax vaccine
16.5.2022
ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் தடுப்பூசியின் விலை குறைக்கப்பட்டது.
தடுப்பூசி
கொரோனா நோய் தொற்று பரவலை வெல்லும் பேராயுதமாக தடுப்பூசி உள்ளது. இதையடுத்து தடுப்பூசி போடும் பணியை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இந்தியாவில் இதுவரை 191.37 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.
கொரோனா தடுப்பூசியின் தேவை அதிகரித்துவரும் நிலையில், ஐதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ என்ற நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசி கோர்பேவாக்ஸ்.
பயோலாஜிக்கல்-இ நிறுவனம் உருவாக்கி உள்ள கோர்பேவாக்ஸ் தடுப்பூசி கொரோனாவுக்கு எதிரான போரில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த நிறுவனத்தின் தடுப்பூசியானது தற்போது 840 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இந்நிலையில், கோர்பேவாக்ஸ் கொரோனா தடுப்பூசியின் விலையை பயோலாஜிக்கல்-இ நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி, 250 ரூபாயாக குறைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, வரிகளுடன் சேர்ந்து 400 ரூபாய் என்ற விலையில் பயனாளிகளுக்கு தடுப்பூசி கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது