“தமிழை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும்”- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
1 min read
புதிய கவர்னர் ஆர்.என்.ரவி
“Tamil should be spread to other states” – Governor RN Ravi’s speech
16/5/2022
தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும் என பல்கலைக்கழக விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறினார்.
பட்டமளிப்பு விழா
சென்னை பல்கலை.பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இந்த விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-
மாணவர்கள், பெற்றோர்களுக்கு வணக்கம். இன்று பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்; இந்த நாள் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் மகிழ்ச்சியான நாளாக அமையட்டும்.
உலகின் மிகத்தொன்மையான மொழி தமிழ் என பிர்தமர் மோடி கூறியுள்ளார். உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தமிழ் இலக்கணமும் இலக்கியமும் பாரம்பரியமிக்கது.
தமிழர்கள் 4,000 ஆண்டுகளுக்கு முன் இரும்பை உருவாக்கி பயன்படுத்தி உள்ளனர் என்பதை தொல்லியல் ஆய்வுகள் உறுதிபடுத்தி இருப்பது பெருமை. முதல்-அமைச்சர் பேரவையில் அறிவித்தப்படி தமிழர்கள் 4,500 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பின் பயன்பாட்டை அறிந்திருந்தனர்.
கல்வி, தொழில், மருத்துவம் ஆகிய துறைகளில் மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் முன்னோடியாக உள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் புகழை மீட்டெடுக்க வேண்டும்.
வழக்காடு மொழி
சென்னை ஐகோர்ட்டில் தமிழ் வழக்காடு மொழியாக வரவேண்டும். தமிழ்மொழியை பிற மாநிலங்களுக்கும் பரப்ப வேண்டும். மற்ற மாநிலங்களில் தமிழை மூன்றாவது மொழியாக சேர்ப்பதற்கு முயற்சிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், முன்னாள் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், முதல்-அமைச்சரின் தனிச்செயலர் எம்.எஸ்.சண்முகம் ஐ.ஏ.எஸ், (பொருளாதாரத்தில் முனைவர் பட்டம்) சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் முனைவர் பட்டம் பெற்றனர்.