தமிழகத்தில் இன்று 34 பேருக்கு கொரோனா
1 min read
34 person affected for korona in Tamil Nadu today
17.5.2022
தமிழகத்தில் இன்று புதிதாக 34 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 42 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 17 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்கள் வருமாறு:-
தமிழகத்தில் இன்று(மே 17) 12,587 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், தமிழகத்தில் 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,54,686 ஆக உள்ளது. மேலும் தற்போது வரை 6,64,30,241 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.
இன்று கொரோனா உறுதியானவர்களில் 14 பேர் ஆண்கள், 20 பேர் பெண்கள். இன்று 42 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர். இதை தொடர்ந்து, கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34,16,337 ஆக உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக இன்று உயிரிழப்பு இல்லை. இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,025 ஆக உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நேற்று (மே 16) 16 ஆக இருந்த நிலையில் இன்று (மே 17) 17 ஆக அதிகரித்து உள்ளது.