சாப்பிட்டால் வாந்தி வருகிறது; உயிர்வாழ ஆசை இல்லை- நித்தியானந்தா பரபரப்பு தகவல்
1 min read
Vomiting after eating; No desire to survive- Nithiyananda sensational information
17.5.2022
“நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. உயிர் வாழ ஆசை இல்லை” என்று நித்தியானந்தா கூறியுள்ளார். தேவையில்லை.
கடத்தல் மற்றும் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் போலீசாரால் தேடப்பட்டு வரும் சாமியார் நித்தியானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி கைலாசா என்ற பெயரில் தனிநாடு உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் அவர் தினந்தோறும் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவிட்டு வருவதோடு மட்டுமல்லாமல் சொற்பொழிவு ஆற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த வாரம் நித்தியானந்தா உடல் நலம் பாதித்து அவர் மரணமடைந்துவிட்டதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இதையடுத்து நித்யானந்தா தனது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில் புகைப்படங்களுடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டார்.
அதில் நான் இறக்கவில்லை சமாதி நிலையில் இருக்கிறேன்நான் இறந்து விட்டதாக கூறும் தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் என்று அவர் கூறினார். இந்நிலையில் நித்தியானந்தாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் நேற்று புதிய பதிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், எனது உடலில் எந்தவித பிரச்சனைகளும் இல்லை, எந்த நோய்களும் இல்லை. அனைத்து உள் உறுப்புகளும் சரியாக வேலை செய்கின்றன. என்னால் உணவு உட்கொள்ள முடியவில்லை. நான் எந்த உணவையும் வாயில் தள்ள முயன்றால் சில நிமிடங்களில் வாந்தி எடுக்கும் நிலை உள்ளது. அதனைப் போலவே எனக்கு உறக்கமும் இல்லை.
என்னைப்பற்றி சீடர்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை என்று நித்தியானந்தா அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் எனது மருத்துவ பராமரிப்புக்காக அல்லது தேவைப்படும் இயந்திரங்களாக எந்த பணத்தையும் அனுப்ப வேண்டாம்.என் உடலை கவனித்துக் கொள்வதற்கு நீங்கள் அனைவரும் ஏற்கனவே போதுமான விட அதிகமாக கொடுத்து விட்டீர்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.