குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து 12 பேர் பலி
1 min read
12 killed as factory wall collapses in Gujarat
18.5.2022
குஜராத்தில் தொழிற்சாலை சுவர் இடிந்து விழுந்து 12 பேர் உயிரிழந்தனர்.
சுவர் இடிந்தது
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தின் ஹல்வட் பகுதியில் உள்ள தொழிற்சாலையில் சுவர் இடிந்து விழுந்தது. அதில், அங்கிருந்த12 பேர் பலியாகினர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தை மாநில அரசு உறுதி செய்துள்ளது.
சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் அலுவலகம், அவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
முதல்வர் பூபேந்திர படேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் விரைவு பணிகளை துரிதபடுத்தும்படி மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.