தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 46 ஆக அதிகரிப்பு
1 min read
Corona incidence increases to 46 in Tamil Nadu
21.5.2022
தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு 46 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தமிழகத்தில் புதிதாக 14 ஆயிரத்து 339 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள் 28 பேரும், பெண்கள் 18 பேரும் உள்பட 46 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் மட்டும் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 29 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும் 13 மாவட்டங்கள் கொரோனாவே இல்லாத மாவட்டங்களாக உருவாகியுள்ளது.
தமிழகத்தில் 65-வது நாளாக எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. 40 பேர் கொரோனா நோயில் இருந்து குணமடைந்து இன்று டிஸ்சார்ஜ்’ செய்யப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.