மதுரை சத்திரப்பட்டியில் கோவில் கும்பாபிஷேகம்
1 min read
Temple consecration at Madurai Chattrapathi
21.5.2022
. மதுரை மாவட்டம் சத்திரப்பட்டி அருகே லட்சுமி நகரில் உள்ள லட்சுமி கணபதி ஆசிரமத்தில் சித்தி,புத்தி சமேத மகா கணபதி கோவில் கும்பாபிஷேகம் நடந்து. அதே கோவில் வளாகத்தில் கட்டப்பட்ட அனுக்ஞை கணபதி, ஞானமுருகன், புவனேஸ்வரி சமேத பாதாள சோமசுந்தர லிங்கேஸ்வரர், துர்க்கை அம்மன், ஜெயவீர ஆஞ்சநேயர், சன்னதிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
சாமி சோமசுந்தர விநாயக அடிகளார் அதிர்ஷ்டானத்துக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது பின்னர் அதிர்ஷ்டானத்துக்கு ருத்ர அபிஷேகம் நடத்தப்பட்டது.
இதில் ஆசிரம நிர்வாகி லட்சுமி சோமசுந்தர விநாயக அடிகளார், சவுந்தர பாண்டியன், டாக்டர் ராமலிங்கம், ராம்நாத், நிர்மல்குமார், ஹரிகரன், புலவர் சங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அன்னதானமும் வழங்கப்பட்டது.