June 29, 2025

Seithi Saral

Tamil News Channel

மே மாத ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடி

1 min read

GST revenue in May stood at Rs 1.40 lakh crore

1/6/2022
மே மாத ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடி ஆகும்.

ஜிஎஸ்டி வரி வசூல்

மே மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி மொத்த வருவாய் மே 2022-ல் ரூ.1,40,885 கோடி வசூலாகியுள்ளது. இதில் மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டி-யாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி-யாக ரூ.73,345 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.37,469 கோடி உட்பட) செஸ் வரியாக 10,502 கோடியும் (இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது வசூலிக்கப்பட்ட ரூ.931 கோடி உட்பட) வசூலாகியுள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டபோது ஒவ்வொரு மாதமும் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் வரி வசூல் செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அதை விடக் குறைவான அளவில்தான் வரி வசூல் இருந்தது. குறிப்பாக கொரோனா பிரச்சினை வந்த பிறகு வரி வசூல் இன்னும் மோசமானது.
இந்நிலையில், நடந்து முடிந்த மே மாதத்தில் இந்திய அரசின் ஜிஎஸ்டி வசூல் 15.9 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, சென்ற மே மாதத்தில் மொத்தம் ரூ.1.40 லட்சம் கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 2022 ஏப்ரல் மாதம் வசூல் செய்யப்பட்ட ரூ.1.67 லட்சம் கோடியை விட 15 சதவீதம் குறைவாகும். எனினும், 2021 மே மாத வசூலை விட 2022 மே மாத வசூல் 44 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. 2021 மே மாதத்தில் மொத்தம் ரூ.97,821 கோடி மட்டுமே வசூல் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் மே மாதத்தில் வசூல் செய்யப்பட்ட மொத்த ஜிஎஸ்டியில், மத்திய ஜிஎஸ்டியாக ரூ.25,036 கோடியும், மாநில ஜிஎஸ்டியாக ரூ.32,001 கோடியும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியாக ரூ.73,345 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது. இதில் இறக்குமதி வாயிலாகக் கிடைத்த ரூ.37,469 கோடியும் அடக்கம். இது தவிர, செஸ் வரியாக ரூ.10,502 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மே மாதம் ஜிஎஸ்டி வருவாய் குறைந்தது பற்றி மத்திய நிதியமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது;- ஜிஎஸ்டி தொடங்கப்பட்டதில் இருந்து மாதாந்திர ஜிஎஸ்டி வசூல் ரூ.1.40 லட்சம் கோடியைத் தாண்டியது இது நான்காவது முறையாகும். ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வசூல், மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்ட வருமானத்தைப் பிரதிபலிக்கிறது. அப்போது அது நிதியாண்டு முடிவடையும் தருவாயென்பதால் ரூ.1.67 லட்சம் கோடி வருவாய் கிடைத்தது. ஏப்ரல் மாத ஜிஎஸ்டி வருவாயை விட மே மாத வருவாய் ‘எப்போதும் குறைவாகவே’ உள்ளது என்று மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.