பிறந்து மூன்றே நாளான குழந்தை எறும்பு கடித்து சாவு
1 min read
Three-day-old baby dies of ant bite
4.5.2022
உத்தரப்பிரதேசத்தில் பிறந்து 3 நாளான பச்சிளங்குழந்தை எறும்பு கடித்து உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பச்சிளம் குழந்தை
உத்தரப்பிரதேச மாநிலம் மஹோபா மாவட்டத்தில் உள்ள மாவட்ட மகளிர் மருத்துவமனையில் சீமா என்ற பெண்ணுக்குக் கடந்த 30ம் தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறப்புப் பிரிவில் சுகாதாரமின்றி எறும்புகள் அதிகளவு இருந்த நிலையில், அங்கு அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை திடீரென உயிரிழந்தது. இதையடுத்து எறும்பு கடித்ததால் தான் குழந்தை பலியானதாகக் குழந்தையின் உறவினர்கள் திடீர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தங்களிடம் லஞ்சம் வாங்கியதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ள நிலையில், இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.