பள்ளிக்கூடத்தில் மாணவர்களுடன் அமர்ந்த முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்
1 min read
MK Stalin, the first minister to sit with students at the school
13.6.2022
அரசு பள்ளியில் ஆசிரியை பாடம் எடுப்பதை வகுப்பறையில் மாணவர்களுடன் அமர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனித்தார்.
பள்ளிக்கூடத்தில் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று புழல் பகுதிக்கு சென்று எண்ணும் எழுத்தும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சென்னை திரும்பும் வழியில் வடகரையில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிக்கூடத்தில் அடிப்படை வசதிகள் எவ்வாறு அமைந்துள்ளது என்பதை பார்வையிட்டார்.
மாணவர்களுடன்…
பள்ளிக்கூடத்தில் உள்ள ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்று பார்வையிட்டபடி வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 10-ம் வகுப்புக்குள் சென்று மாணவர்களுடன் அமர்ந்தார். அங்கு பாடம் எடுத்த ஆசிரியையிடம் நீங்கள் தொடர்ந்து பாடம் எடுங்கள் என்றார். அதைத்தொடர்ந்து ஆசிரியை எவ்வாறு பாடம் சொல்லிக் கொடுக்கிறார் என்பதை சிறிது நேரம் கவனித்தார். அதன் பிறகு பள்ளியின் சமையலறைக்கு சென்று பார்வையிட்டார். கழிவறை பகுதிக்கும் சென்று பார்வையிட்டு வந்தார்.