நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து; வாலிபர் கைது
1 min read
Slanderous remarks about the Prophet; Valipar arrested
14/6/2022
நபிகள் நாயகம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார். பீதர்: பா.ஜனதா செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா, நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்ததால் நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் பீதர் மாவட்டம் பசவகல்யாணில் நபிகள் நாயகம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்ட வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
முன்னதாக, நபிகள் நாயகம் குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பரப்பியவரை கைது செய்ய வலியுறுத்தி பசவகல்யாண் போலீஸ் நிலையத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் முஸ்லிம் அமைப்பினர் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு போலீசார் வாலிபரை கைது செய்தனர்.